Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

பழநி கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு பழநி கோயில்களில் புரட்டாசி ... திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி உற்சவம் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கர நாராயணர் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
18:04

மதுரை: மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி  சிவாலயபுரம் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில், இன்று  25.09.2021, புரட்டாசி மாதம் 9-ம் நாள், இரண்டாம்  சனிக்கிழமை, சிறப்பு  அர்ச்சனை, அலங்கார வழிபாடு சங்கர நாராயணருக்கு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக சங்கர நாராயணர் சுவாமிக்கு,  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சி  அளித்தார். இன்றைய பூஜை இறைப் பணியில் தாமரைப்பட்டியை சேர்ந்த அம்மா மெஸ் உணவகத்தின் குடும்பத்தினர்கள். பக்தர்களுக்கு புளியோதரை, சுண்டல், சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ், சங்கர  நாராயணர் கோயில் கல்வி  அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று மாலை ... மேலும்
 
temple
 உடுமலை: திருமூர்த்தி மலையில் பெய்த கன மழை காரணமாக, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் ... மேலும்
 
temple
திருப்பூர்: மண்ணரை, சத்யா காலனியிலுள்ள ஸ்ரீ பாலமரத்து கருப்பராய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு ... மேலும்
 
temple
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசி ... மேலும்
 
temple
திண்டிவனம்: திண்டிவனம் சாய்பாபா கோவிலில், சாய்பாபா ஆராதனை பெருவிழா நடந்தது.ஸ்ரீ சீரடி சாய் சக்தி கணேசா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.