தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள தாழையூரில் கூத்தாடி முத்து பெரிய நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஏற்கனவே திருட்டு நடந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் நடந்ததால் நிர்வாகத்தினர் கோயிலில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கோயிலை பூஜாரி வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை கோயிலை திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சிசி டிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது மூன்று பேர் ஆயுதங்களுடன் உண்டியலை கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இது பற்றி ஆறாவயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அந்த கும்பலை தேடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் தேவகோட்டை நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியலையே கொள்ளையடித்து சென்றனர். கடந்த ஆண்டு அருகில் உள்ள கொத்தங்குடி இடையன்காளி கோயிலிலும் மூன்று பேர் ரூ. 15 லட்சம் பெறுமான வெள்ளி மற்றும் பொருட்களை திருடி சென்றனர். இக்கொள்ளையர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.