Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சிம்மம் : ஐப்பசி ராசிபலன் சிம்மம் : ஐப்பசி ராசிபலன் துலாம் : ஐப்பசி ராசிபலன் துலாம் : ஐப்பசி ராசிபலன்
முதல் பக்கம் » தை ராசி பலன் ( 14.1.2022 முதல் 12.2.2022 வரை)
கன்னி : ஐப்பசி ராசிபலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
07:59

உத்திரம் - 2, 3, 4: உழைப்பை மூலதனமாக கொண்டு செயல்படும் உத்திர நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்னைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.
சந்திராஷ்டம தினம்: அக் 20, 21
அதிர்ஷ்ட தினம்:அக் 31

அஸ்தம்:
சோம்பேறியாக இருப்பது கூடாது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் குணமுடைய அஸ்த நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல் துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும்.
சந்திராஷ்டம தினம்: அக் 21, 22
அதிர்ஷ்ட தினம்:அக் 31

சித்திரை - 1, 2:
எவ்வளவு வேலை என்றாலும் சளைக்காமல் அதை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற சித்திரை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். மேலிடத்தின் மூலம் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும்.

பரிகாரம்: ஸ்ரீ அனுமனுக்கு பானகம் நிவேதனம் செய்து வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.
சந்திராஷ்டம தினம்: அக் 22, 23
அதிர்ஷ்ட தினம்:நவ 1

 
மேலும் தை ராசி பலன் ( 14.1.2022 முதல் 12.2.2022 வரை) »
temple
அசுவினி: தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நினைத்த காரியத்தை ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3, 4: அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கார்த்திகை நட்சத்திர ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் ம்ருகசீரிஷ நட்சத்திர ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: சொல்லாற்றல் மிக்க புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் சாமர்த்தியமாக பேசி காரியத்தை ... மேலும்
 
temple
மகம்: சொந்த முயற்சியாலும், மனதுணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மக நட்சத்திர அன்பர்களே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.