Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீத்தாம்பாளையம் காமாட்சி அம்மன் ... முருங்கப்பாக்கத்தில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை முருங்கப்பாக்கத்தில் ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 அக்
2021
05:10

பல்லடம்: சுக்கம்பாளையத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. பல்லடம் அடுத்த, சுக்கம்பாளையம் கிராமம் ஊஞ்சப்பாளையத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. அக்., 23 அன்று கணபதி ஹோமம், பூர்ணாகுதி, முளைப்பாரி எடுத்தல், தீர்த்த குடம் கொண்டு வருதல், முதல் கால வேள்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று இரண்டாம் கால வேள்வி, திருப்பள்ளி எழுச்சி, ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. காலை, 8.00 மணிக்கு, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் எடுத்து வரப்பட்டு, விநாயகர், ராகு கேது, ஆஞ்சநேயர், ஆதிசேஷன், மற்றும் கருடாழ்வாருக்கும் அதையடுத்து மூலவர் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பேரூர் சந்தானம் ஐயங்கார், மற்றும் காட்டூர் சென்றாய பெருமாள் கோவில் பட்டாச்சார்யார் ரவி ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீநிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar