Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மழைநீர்: பக்தர்கள் அவதி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஞான ரதயாத்திரை தொடங்கினார்
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஞான ரதயாத்திரை தொடங்கினார்

பதிவு செய்த நாள்

30 நவ
2021
09:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன 27வது குருமகா சந்நிதானம் சொக்கநாத பெருமானுடன் வடமாநிலங்களுக்கு குரு லிங்க சங்கம ஞான ரதயாத்திரை நேற்று தொடங்கினார்.

மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று 29ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வடமாநிலங்களுக்கு குரு லிங்க சங்கம ஞான ரத யாத்திரையை தொடங்கியுள்ளார். இதனையொட்டி நேற்று காலை தருமை ஆதீனத்தில் சொக்கநாத பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குருமகாசன்னிதானம் தனது தலையில் சொக்கநாதப் பெருமானை சுமந்து வந்து ஞானத்தில் எழுந்தருளச் செய்து மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஞானபுரீஸ்வரர், விநாயகர் கோவில்களில் ஞான ரதத்தில் இருந்தவாறு குருமகாசன்னிதானம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு யாத்திரையைத் தொடங்கினார். ஆதீனம் கல்லூரி, மேல்நிலைப்பள்ளி மயூரநாதர் கோவில் குமார கட்டளை, குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயில்களில் ஞானத்திற்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், மாணிக்க வாசகர் தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆடிட்டர் குரு சம்பத்குமார், ஆதீன கல்லூரி செயலாளர் செல்வநாயகம், முதல்வர் சாமிநாதன், பள்ளி செயலாளர் திருநாவுக்கரசு, டாக்டர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஞானரதம் திருப்பனந்தாள், கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக நேற்று இரவு பெங்களூர் ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் திருமடத்தினை சென்றடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar