சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூரில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது. இங்குள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் சதுர்வேதமங்கலம் ஆத்ம நாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயிலிலும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.