பதிவு செய்த நாள்
27
டிச
2021
03:12
உடுமலை: தில்லை நகரில், ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமி சன்னதியில், மண்டல பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று, சிறப்பு அபிஷேகம் நடந்து. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வால்பாறை: வால்பாறை நகர் வாழைத்தோட்டம் அய்யப்பசுவாமி கோவிலின், 62 ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும், 30 தேதி வரை தினமும், காலை, 5:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக, சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு, காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை கோவில் வளாகத்தில் பறையெடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. - நிருபர் குழு -