கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ஜகத்குரு சங்கர மடத்தில், சென்னை அகிலலோக தசமஹா வித்யாபீடம் மற்றும் கிருஷ்ணகிரி ராதா கல்யாண உற்சவக்குழு சார்பில், 11ம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம் நேற்று நடந்தது. இது, உலக நன்மைக்காக ஆண்டுதோறும், கிருஷ்ணகிரியில் கடந்த, 60 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சாய் பிரசாத் பாகவதர் குழுவினரால், சாக்த சோமசுந்தர சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியில், ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து வந்து குழந்தைகள் நடனமாடினர். தொடர்ந்து கிருஷ்ணனின் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. மதியம், 1:45 மணிக்கு ராதா, கிருஷ்ணபகவான் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராதா கல்யாண உற்சவக்குழுவினர் செய்திருந்தனர்.