சரநாராயண பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2022 12:01
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து (திருமொழித்திருநாள்) உற்சவம் நேற்று துவங்கி வரும் 12 ம்தேதி வரை நடக்கிறது.முதல் நாளான நேற்று காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பிற்பகல் 3:00 மணிக்கு பிரபந்த சேவா காலம், 4:00 மணிக்கு பிரபந்த சாற்றுமுறை நடந்தது.மாலை 5:00 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாள் ருக்மணி சமேத வேணுகோபாலன் அலங்காரத்தில் உள்புறப்பாடு வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.