சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2022 03:01
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை (13ம் தேதி) வைகுண்ட ஏகாதேசியன்று நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகளின் படி பொதுமக்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்ற மாதம் பெய்த கனமழையின் காரணமாக சொர்க்கவாசல் திறப்பு அருகே உள்ள சுற்று சுவர் சரிந்து இருப்பதால் பக்தர்களை மலைமேல் அனுமதிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மலைக்கோயில் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் நலன் கருதி அலங்கரிங்கப்பட்ட உற்சவர் ரங்கநாதர் மலை அடிவாரத்தில் வைத்து பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.