பதிவு செய்த நாள்
12
ஜன
2022
03:01
கலாசிபாளையா : தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி சமுதாய பொங்கல் விழா பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கல்வி நிலைக்குழு தலைவர் தன்ராஜ் ஏற்பாட்டில் விமரிசையாக நடந்தது.
பெங்களூரு கலாசிபாளையா ஏ.எம்.சாலையில் நடந்த விழாவில் சிக்பேட்டை பா.ஜ., - எம்.எல்.ஏ., உதய் கருடாச்சார், மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங், தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, முன்னாள் கவுன்சிலர் பிரதிபா தன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.தமிழர்களின் பாரம்பரியப்படி 200க்கும் அதிகமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கொரோனாவால் சமூக விலகல் கடைபிடித்து விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதே வேளையில் அப்பகுதியை சேர்ந்த, 1,500 குடும்பத்தினருக்கு பொங்கல் தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.பித்தளை பாத்திரம், அரிசி, வெல்லம், முந்திரி, உலர்ந்த திராட்சை, பாசி பருப்பு, நெய் என பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.