போடி: போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு தானியங்கள் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சமூக இடைவெளியில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர். * போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.