உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால் அபிஷேகம் மற்றும் பால்குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2022 06:07
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடந்தது. இந்த பால்குட ஊர்வலம் பஸ் நிலையம் அருகே உள்ள குளக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. இதில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். பின்ன சுவாமிக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த ஊர்வலத்தில் ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் அறங்காவலர் செல்லையா உள்ளிட்ட ஏராளனமானோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். அப்போது சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் குமரகுரு தலைமையில் ஒன்றிய செயலாளர் மணிராஜ், ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், நகர துணை செயலாளர் கஜேந்திரன், வார்டு செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.