போடி: போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கங்காதரன் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.
* போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் காய்கறி அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது.
* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய
கீழச்சொக்கநாதர் கோயில். மேலச் சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், திருமலாபுரம் வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.