Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ... சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு:  பக்தர்கள் தரிசனம் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2023
04:01

திருப்பரங்குன்றம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டி நகர் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளியுள்ளதால் நேற்று மாலை ஆறு மணிக்கு கம்பத்தடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியில் உள்ள பெரிய கதவிற்கு சந்தனம், மாலை சாத்துபடியாகி பூஜைகள் முடிந்து திறக்கப்பட்டு பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினார். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர் ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர்கள் சயன கோலத்தில் அருள்பாலித்தனர். இரவு கருட வாகனத்தில் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடாடு நடந்தது.

மகாலட்சுமி நெசவாளர் காலனி பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து உற்சவர்கள் சயன கோலத்தில் அருள்பாலித்தனர். இரவு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி புறப்பாடு நடந்தது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருநகர் ஸ்ரீ்நிவாசாநகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து உற்சவர்கள் சயன கோலத்தில் அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar