சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2023 04:01
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மூலவர் ரங்கநாதருக்கு தைலகாப்பு செய்தனர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு பூஜை செய்தனர். 5 மணிக்கு ரங்கநாதர் சொர்க்க வாசல் வழியாக முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், மேலாளர் மணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், அலுவலர் இளம்கீர்த்தி மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். மலை சுற்று மதில் இடிந்து விழுந்து செப்பணிடும் பணி நடந்து வருவதால் மலை மீது பக்தர்கதள அனுமதிக்க வில்லை. மலையடிவாரத்தில் ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.