பதிவு செய்த நாள்
28
ஜன
2023
03:01
சூலூர்: கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில், வரும், பிப்., 5 ம்தேதி தைப்பூச தேரோட்டம் நடக்கிறது.
கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காட்டில் உள்ள சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு நடக்கும் தைப்பூச தேரோட்டம் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு தைப்பூச தேர் திருவிழா பூஜைகள், கணபதி ஹோமத்துடன் நேற்று அதிகாலை துவங்கியது. இரவு கிராம சாந்தி நடந்தது. இன்று காலை, 5:00 மணிக்கு, சென்னியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 7:35 மணிக்கு, திருத்ததேருக்கு முகூர்த்த கால் பூஜை நடக்கிறது. காலை, 10:45 மணிக்கு திருக்கொடி ஏற்றும் வைபவம் நடக்க உள்ளது. பிப்., 4 ம்தேதி வரை காலை திருவீதி உலாவும், அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, வள்ளியம்மை திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு யானை வாகனத்தில் முருகன் திருவீதி உலா நடக்கிறது. பிப்., 5 ம்தேதி, காலை, 6:00 மணிக்கு, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை, 4:00 மணிக்கு தைப்பூச தேரோட்டம் நடக்கிறது.