கமுதி: கமுதி அருகே அய்யனார் குளம் வழிவிட்ட அய்யனார் கோயிலில் ராமநாதபுரம் உதவி ஆணையர் அறிக்கையின்படி திருக்கோயிலில் குடமுழுக்கு திருப்பணி வேலைகள் மேற்கொள்ள முதுகுளத்தூர் சரக ஆய்வாளர் ,கோயில் அர்ச்சகர் முன்னிலையில் ஆகமவிதிகள், துறையின் சட்டவிதிகளை பின்பற்றி சலனமில்லாமல் சிலைகளை அகற்றாமல் பாலாலயம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளனர். இதனைஅடுத்து வழிவிட்ட அய்யனார் கோயிலில் முதுகுளத்தூர் சரக ஆய்வாளர் உதயகுமார், அறங்காவலர் கார்த்திகேயன் முன்னிலையில் குருக்கள் ராமநாதசுவாமி தலைமையில் பாலாலயம் பூஜை நடந்தது.கணபதி ஹோமம் தொடங்கி சிறப்பு ஹோமம் நிகழ்ச்சி நடந்தது. பின்பு வழிவிட்ட அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.