மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா 25ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2023 06:04
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா வருகிற ஏப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.விழா நாட்களின் போது சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.கோவில் முன்பாக வைகை ஆற்றில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். வைகை ஆற்றுக்குள் சிறுவர்களுக்காக ராட்டினங்கள் மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.இதற்காக மானாமதுரை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடந்த சில நாட்களாக மானாமதுரையில் வைகை ஆறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா வருகிற ஏப். 25ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே.2ம் தேதியும்,மே.3ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.