Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துணை ஜனாதிபதி இல்லத்தில் பிரதமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவ கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

07 நவ
2026
04:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.


மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி 30 நாட்கள் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம் இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 18ம் தேதி துலா மாத பிறப்பு தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. இதில் கடைசி 10 நாள் விழா கொடியேற்றப்பட்டு மிகவும் விமர்சையாக நடக்கும். அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனையொட்டி இன்று திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் சுவாமி கோயிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெரியகொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில்  பஞ்சமுக கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சுவாமி, அம்பாள் உள்பட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் சிவபுரம்வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 


இதேபோல் அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் கோவில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் கோயில், படித்துறை காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் விசாலாட்சி சமேத காசிவிஸ்நாதர் சுவாமி கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடந்தது. இதில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், அன்பேசிவம் அறக்கட்டளை தலைவர் பாலச்சந்திரசிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar