திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா : கிரிவலம் சென்று வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2023 03:05
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் ராஜகோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் செல்ல துவங்கினர். கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே, அமைக்கப்பட்ட பந்தலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோடைவெயிலில் வரும் பக்தர்களுக்கு டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்டு, ஐஸ் மோர் இலவசமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள், ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.