வடரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2023 05:11
மயிலாடுதுறை; சீர்காழி அருகே வடரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வடரங்கம் கிராமத்தில் ரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக திரளான பக்தர்கள் 51 வகையான சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மேளத்தாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பெருமாள் தாயார் எதிர்சேவையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. அதன் பின்னர் திருக்கல்யாண சம்பிரதாய சடங்குகள் தொடங்கி நடைபெற்றது. பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்கள மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மொய் எழுதி வழிபாடு செய்தனர்.ஏற்பாடுகளை சேலத்தைச் சேர்ந்த அயோத்தியாபட்டினம் ஸ்ரீ சன்னியாசி ரிஷி மடம் மற்றும் சத்ய நாராயணன் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.