ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட எடுத்த காரியம் நடக்கும்.. எதிலும் வெற்றி கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2024 07:04
பங்குனி ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. பங்குனி தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் அதை போற்றுகின்றன. இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியமாகும் வீட்டில் செல்வம் பெருகும் சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. ஏகாதசி விரதத்தை பட்டினியுடன் திருமாலின் நினைவாகவே முழுவதுமாக முறையாக அனுஷ்டித்தால் வறுமையும் ஓடிவிடும். கல்வி அறிவு பெருகும். தைரியம் உண்டாகும். வற்றாத செல்வம் கிட்டும்.இன்று பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட துன்பம் நீங்கும், எதிலும் வெற்றி கிடைக்கும்!