கொடைக்கானலில் குரு பெயர்ச்சி விழா; குவிந்த பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2024 10:05
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பக்தர்கள் மிளகு, தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.