Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுதுபடையல்; வளைகாப்பு விழா தில்லை சிவகாளி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரிநாத் கோவில் தரிசனத்திற்கு திறப்பு
எழுத்தின் அளவு:
பத்ரிநாத் கோவில் தரிசனத்திற்கு திறப்பு

பதிவு செய்த நாள்

13 மே
2024
10:05

டேராடூன் : உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் நடை, பக்தர்களின் தரிசனத்துக்காக நேற்று திறக்கப்பட்டது. உத்தரகண்டில் பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோவில்கள், கடும் பனிப்பொழிவு இருக்கும் குளிர் காலத்தில் மூடப்பட்டு, கோடை காலத்தில் திறக்கப்படுவது வழக்கம். இந்த நான்கு கோவில்களுக்கும் பக்தர்கள் செல்லும் யாத்திரை, சார்தாம் யாத்திரை எனப்படுகிறது. இந்நிலையில் அட்சய திருதியையொட்டி, கடந்த 10ம் தேதி கேதார்நாத், யமுனோத்ரி கோவில்கள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அன்றைய தினமே கங்கோத்ரி கோவில் திறக்கப்பட்டது. இந்நிலையில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில், வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க நேற்று காலை 6:00 மணிக்கு திறக்கப்பட்டது. இதையொட்டி கோவில் முழுதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்ய கடந்த 11ம் தேதி மாலை 4:00 மணி வரை 7,37,885 பேர் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். பத்ரிநாத் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, சார்தாம் யாத்திரை துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar