Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் ... காஞ்சி சங்கரமடத்தில் வேதம் படித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் நீதிபதி காஞ்சி சங்கரமடத்தில் வேதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் 1007ம் ஆண்டு உற்சவ விழா; கந்த பொடி வசந்தத்துடன் நிறைவு
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் 1007ம் ஆண்டு உற்சவ விழா; கந்த பொடி வசந்தத்துடன் நிறைவு

பதிவு செய்த நாள்

14 மே
2024
11:05

ஸ்ரீபெரும்புதுார்: ராமானுஜர் 1,007ம் ஆண்டு உற்சவ விழா, கந்த பொடி வசந்தத்துடன் நிறைவடைந்தது. பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் கந்த பொடியை துாவி மகிழ்ந்தனர்.

ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜரின் 1,007ம் ஆண்டு அவதார உற்சவ விழா, மே 3ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் பல்வேறு வாகனங்களில் ராமானுஜர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின், 10ம் நாளான நேற்று முன்தினம் சாற்றுமுறை விழா நடந்தது. இரவு முழுதும் பஜனை பாடல்கள் பாடியவாறு நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் வலம் வந்து, நேற்று காலை கோவிலை சென்றடைந்தனர். திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட 108 திவ்ய தேசமாக கருதப்படும் பெருமாள் கோவில்களில் இருந்து மாலை, பட்டு வஸ்திரங்கள், பரிவட்டம் கொண்டு வரப்பட்டு ராமானுஜருக்கு சாற்றப்பட்டன. இதை தொடர்ந்து, கந்தபொடி வசந்தம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் ராமானுஜர் மீதும், பக்தர்கள் மீதும் கந்த பொடி எனும் மஞ்சள் பொடியை ஒருவர் மீது ஒருவர் துாவி கொண்டாடி, மகிழ்ந்தனர். இதையடுத்து ராமானுஜர் 1,007ம் ஆண்டு அவதார விழா நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar