அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2024 10:05
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் , அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறும். இவ்வாண்டு, வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே வரும் மே 20 திருக்கல்யாணமும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 23 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மே 26 தெப்பமும் மே 27 புஷ்ப பல்லக்கும், நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அரங்காவலர் சீனிவாசன், செயல் அலுவலர் விநாயகவேல் செய்து வருகின்றனர்.