லலிதாம்பிகை அம்மன் கோயில் நிலைவாசல் கால் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2024 10:06
பெ.நா.பாளையம்; பெரியதடாகம் லலிதாம்பிகை அம்மன் திருக்கோயில் நிலை வாசல்கால் பிரதிஷ்டை விழா நடந்தது.
பெரியதடாகம் லலிதாம்பிகை அம்மன் திருக்கோவிலில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இக்கோவிலில் நிலைவாசல்கால் பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், நிலைவாசல்கல்லுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை லலிதாம்பிகை பீடம் சுவாமி ஜெகதாத்மானந்தா சரஸ்வதி செய்திருந்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, லலிதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன.