Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழபுரம் சிவன் கோயிலில் ஆனி ... ஆனி அனுஷ நட்சத்திரம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆனி அனுஷ நட்சத்திரம்; காஞ்சி மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2024
12:06

தேவகோட்டை; கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில்ஆனித்திருவிழா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாளான இன்று ஆனி கேட்டை நட்சத்திரத்தில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் மாம்பழத் திருவிழா எனும் ஆனித்திருவிழா கொடியெற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 17 ந்தேதி திருக்கல்யாணமும், இன்று 21ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. முன்னதாக இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருள சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். எப்போதும் மாலை நேரத்தில் தேரோட்டம் நடக்கும். இந்தாண்டு காலை 7:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. தேர் சுற்றி வந்து கோயில் எதிரிலுள்ள வழக்கமான இடத்தில் நிலை நிறுத்தப்படும். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தேரில் சொர்ண மூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மனை வழிபட வசதியாக மாலை 5:00 மணி வரை சுவாமி, அம்மன் தேரிலேயே வீற்றிருப்பர். பக்தர்கள் அர்ச்சனை செய்து கொள்ளலாம். கண்டதேவிக்குள் செல்பவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar