ஆடி வெள்ளி; ஜெய மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2024 10:07
கோவை; சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோடு காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சித்தி விநாயகர் - ஸ்ரீ ஜெய மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் காய் கனி அலங்காரமான சாகம்பரி அலங்காரத்தில், மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் முப்பெரும் தேவியராக பக்தர்களுக்கு ஜெய மாரியம்மன் அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.