குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2024 02:08
கோவை ; மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி கிராமம் குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் ஆவணி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு மலை மேல் அமர்ந்திருக்கும் வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் மஞ்சள் நிற வஸ்திரத்தில் வெற்றிலை மாலையுடன் அனுமன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீர ஆஞ்சநேயரை வழிபட்டனர்.