விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, விஷ்ணுவின் உடலில் இருந்த மாயாசக்தி, ஒரு பெண்ணின் வடிவெடுத்து, அவர்களை அழிக்க புறப்பட்டது. வெற்றியுடன் வைகுண்டம் திரும்பிய அந்த சக்தியைப் போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி. அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் ஏற்பட்டதாக பத்மபுராணம் கூறுகிறது. பாற்கடலில் பெற்ற அமிர்தத்தை மோகினி வடிவெடுத்த விஷ்ணு, தேவர்களுக்கு வழங்கிய நாளே வைகுண்ட ஏகாதசி என்றும் சொல்வர். உபநிடதங்களின் சாரமாக விளங்குவது பகவத்கீதை. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்த நாள் ஏகாதசியன்று தான். அதனால், இந்த திதிக்கு கீதா ஜெயந்தி என்றும் பெயருண்டு. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், பெருமாளை வழிபட எவ்வளவு புண்ணியம் சேரும்..! பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும்.