Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோத்சவத்தில் ... ஓம் சக்தி செல்வ வராகி அம்மன் சக்தி பீடத்தில் திருவிளக்கு பூஜை ஓம் சக்தி செல்வ வராகி அம்மன் சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை; திருமலை சென்றது
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை; திருமலை சென்றது

பதிவு செய்த நாள்

26 செப்
2025
04:09

ஸ்ரீவில்லிபுத்துார்; திருப்பதியில் நடக்கும் புரட்டாசி பிரமோத்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் இன்று கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று மதியம் 1:30 மணிக்கு வெள்ளி குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு மாலை, கிளி, பரிவட்டம் சாற்றப்பட்டு, ராஜா பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாளுக்கு சாற்றப்பட்ட மாலை, கிளி, பரிவட்டங்களை ஒரு கூடையில் வைத்து ஸ்தானிகம் ஹயக்ரீவாஸ், கோயில் பட்டர்கள் மாடவீதிகள் சுற்றி கொண்டு வந்தனர். பின்னர் கார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பன், செயல் அலுவலர் சக்கரை அம்மாள், ராம்கோ இயக்குனர் ஸ்ரீகண்டன் ராஜா, கோயில் பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர். இந்த மாலையை இன்று திருப்பதி கோவில் நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது. நாளை கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar