Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ... உலக நன்மைக்காக மகா நவக்கிரக ஹோமம் உலக நன்மைக்காக மகா நவக்கிரக ஹோமம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை சபரீச சேவா சங்கத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா மஹோத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை சபரீச சேவா சங்கத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா மஹோத்சவம்

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
05:01

​கோவை: கோவையில் ஸ்ரீ சபரீச சேவா சங்கத்தின் 13-ஆம் ஆண்டு ஸ்ரீ தர்மசாஸ்தா மஹோத்சவம் இன்று ஜன., 3, 4ம் தேதிகளில் நடைபெற உள்ளது.


கோயம்புத்தூர் இடையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள V.R.G திருமண மஹாலில், ஸ்ரீ சபரீச சேவா சங்கத்தின்13-ஆம் ஆண்டு ஸ்ரீ தர்மசாஸ்தா மஹோத்சவம் நாளை  (சனி) மற்றும் 4-ம் தேதி (ஞாயிறு) ஆகிய இரு தினங்கள் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.


விழாவின் முதல் நாளான இன்று காலை 6.00 மணி முதல் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் மற்றும் ஸ்ரீ ஸ்வயம்வர பார்வதி ஹோமங்கள் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும், தொடர்ந்து ஸ்ரீ சபரீச பஜன் மண்டலி பேரூர் சத்யா & பார்ட்டி குழுவினரின் நாமசங்கீர்த்தனமும் நடைபெற்றது. மாலை 5.00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் (நகர்வலம்), இரவு திரு ஆய்க்குடி குமார் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும் நடைபெற உள்ளது.


​நாளை ஜனவரி 04ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ஹரிஹரபுத்ர மூல மந்திர ஹோமம்   காலை 9.00 மணிக்கு சங்காபிஷேகம் மற்றும் சாஸ்தா அஷ்டாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு ஸ்ரீ ராம் கோபால் பாகவதர் குழுவினரின் ஹரிஹரபுத்ர நாமசங்கீர்த்தனம் நடைபெறும்.  காலை 11 மணிக்கு 18  வகை மலர்களால் 18 படிகள் அமைத்து புஷ்பாபிஷேகம் நடைபெரும் .    மதியம் 12.30 மணிக்கு மஹா தீபாராதனைக்குப் பிறகு, 1.00 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ​இந்த பக்தி நிகழ்வுகளில் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி ஆன்மீக அன்பர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ தர்மசாஸ்தாவின் அருளைப் பெறுமாறு ஸ்ரீ சபரீச சேவா சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar