Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆழ்வார் மோட்சத்தில் காட்சியளித்த ... அஷ்டமி பிரதட்சனம் : ஜன., 11ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தப்படும் அஷ்டமி பிரதட்சனம் : ஜன., 11ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு

பதிவு செய்த நாள்

09 ஜன
2026
01:01

திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவுபெற்றது.


பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்  வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் 21 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். டிசம்பர் 20ம்தேதியன்று பகல்பத்து திருவிழா தொடங்கியது. முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு (டிசம்பர் 30ம்தேதி அதிகாலை நடந்தது. இதையடுத்து நடைபெற்றுவந்த இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை, வேடுபறி உற்சவம் மற்றும் நேற்றையதினம் நம்பெருமாள் தீர்த்தவாரியும் வைபவமும் வெகுசிறப்புடன் நடைபெற்றதுடன், இராப்பத்து திருநாளின்போது தினசரி திறக்கப்பட்டுவந்த பரமபதவாசலும் நேற்று இரவு 8மணியுடன் மூடப்பட்டது. 


21 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடந்தது. காலை நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவத்தை முன்னிட்டு நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடிகளில் சரணடந்தார். அவரது விக்ரஹம் முழுவதும் திருத்துழாய் எனப்படும் துளசி மூலம் மறைக்கப்பட்டு மோட்சம் அளிக்கப்பட்டது.  நம்பெருமாள் தனது மாலையை நம்மாழ்வாருக்கு அணிவித்து சகல மரியாதையுடன் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து நம்பெருமாள் காலை 10மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவுபெற்றது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar