பதிவு செய்த நாள்
09
ஜன
2013
11:01
காரிமங்கலம்: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு இன்று (ஜன., 9) நடக்கிறது. இன்று மாலை, 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
* தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தையொட்டி இன்று மாலை, 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம், ஸ்ரீ வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது. மாலை, 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை குருக்கள் மோகன்குமார் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
* பாலக்கோடு பால்வண்ணநாதர், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை, 4 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.