பதிவு செய்த நாள்
09
ஜன
2013
11:01
மோகனூர்: கோவில் உண்டியலில், பக்தர்கள் அளித்த காணிக்கை நிரம்பி உள்ளதால், சிதறி கீழே விழுகிறது. மோகனூர், காவிரி ஆற்று கரையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி மற்றும் கோவில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி, 23ம் தேதி நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், முன் மண்டபத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை எண்ணப்பட்டு, கோவில் கணக்கில் செலுத்தப்படும். கடந்த ஐந்து மாதத்துக்கு முன், உண்டியல் திறந்து பக்தர்களின் அளித்த காணிக்கை எண்ணப்பட்டது. அதன் பின், இதுவரை உண்டியல் திறக்கவில்லை. இந்நிலையில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் உண்டியல் நிரம்பி உள்ளது. அதனால், பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கீழே விழுந்து சிதறுகிறது. "உண்டியலை திறந்து, காணிக்கைகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.