கந்தசுவாமி கோவிலில் 14ம் தேதி பொங்கல் பால்குட விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2013 11:01
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் 14ம் தேதி பொங்கல் பால்குட விழா நடைபெற உள்ளது. திருப்போரூர் கந்தன் வழிபாட்டு மன்றத்தினர், ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில், தினமும் பச்சை நிற உடையுடன் கிரிவல ஊர்வலம், ஒரு நாள் வல்லக்கோட்டைக்கு நடைபயணம் மேற்கொண்டு கோடையாண்டவரை வழிபடுகின்றனர். பொங்கல் பண்டிகை அன்று பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று, கந்தனுக்கு பால்குட அபிஷேகம் நடத்துகின்றனர். வரும் 14ம் தேதி, 22ம் ஆண்டு பொங்கல் பால்குட விழா நடைபெற உள்ளது. அன்று காலை 9:00 மணிக்கு, காவடி மண்டபத்திலிருந்து 1,008 பால்குடங்கள் புறப்பட்டு, கிரிவல ஊர்வலம் வருவர். ஊர்வலம் முடிவில் கந்தனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். பால்குட ஊர்வலத்தை, கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் துவக்கி வைக்க உள்ளார்.