பதிவு செய்த நாள்
10
ஜன
2013
11:01
கிருஷ்ணகிரி: ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும், ஒன்பதாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 325 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தலைப்பிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு, இரண்டு ஆயிரத்து, 500 ரூபாய், இரண்டாம் பரிசு ஆயிரத்து, 500 ரூபாய், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம், 12 தலைப்புகளில், 36 பரிசுகள், 60 ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்கள் மற்றும் தொகையும், சான்றிதழ்களையும் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி வழங்கினார். டி.ஆர்.ஓ., பிரகாசம், எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், ஆர்.டி.,ஓ மனோகரன், யூனியன் சேர்மேன் கோவிந்தராஜ், தாசில்தார் மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.