Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  இறைவழிபாடு செய்தால் கைமேல் பலன் ...  கீழடிக்கு முந்தைய காலத்தின் கடல் சங்கு, எலும்புக்கூடு கண்டெடுப்பு கீழடிக்கு முந்தைய காலத்தின் கடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரர் கோவிலில் தங்கத்தேர் சோதனை ஓட்டம்; பக்தர்கள் கடும் அதிருப்தி
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரர் கோவிலில் தங்கத்தேர் சோதனை ஓட்டம்; பக்தர்கள் கடும் அதிருப்தி

பதிவு செய்த நாள்

03 மே
2026
08:05

காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மூன்றாவது பிரகாரத்தில் பக்தர்களுக்கு தெரிவிக்காமல் நடத்தப்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் இச்செயலால், பக்தர்க ள் மற்றும் தேர் வழங்கிய அறக்கட்டளை நிர்வாகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், மரத்தேர் செய்யப்பட்டது. 25.5 அடி உயரம், 13.5 அடி நீளம், 10 அடி அகலத்தில், பர்மா தேக்கில் செய்யப்பட்ட இந்த மரத்தேரின் மீது, தங்க தகடுகள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்காக, மொத்தம் 36 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த தங்க தேர், கடந்த ஆண்டு டிச. , 6ல் வெள்ளோட்டம் நடத்தப்பட்டு, ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ரத சப்தமியான ஜன., 25ல், ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க தேரோட்டம், நான்கு ராஜ வீதிகளிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அன்று காஞ்சிபுரத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதால், தங்க தேரோட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், தங்க தேரோட்டத்தை ராஜ வீதிகளில் நடத்த வேண்டும் என, பக்தர்களும், தங்கத்தேர் வழங்கிய ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளையினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு, ஏகாம்பரநாதர் கோவிலில் நடை சாற்றிய பின், பு திய தங்கத்தேரின் சோதனை ஓட்டத்தை, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடத்தியுள்ளனர்.இது, பக்தர்களிட மும், அறக்கட்டளை நிர்வா கத்தினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்ட ளை அறங்காவலர் ‘வலசை’ ஜெயராமன் கூறியதாவது: தங்க தேரோட்டம் நடத்தக்கோரி இதுவரை 13க்கும் மேற்பட்ட பதிவு தபால் அனுப்பியுள்ளோம். ஹிந்து சமய அறநிலையத் துறையினர் எங்கள் அறக்கட்டளைக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல், தன்னிச்சையாக கோவில்நடை சாற்றிய பின், மதியம் 2:00 மணிக்கு, உட்பிரகாரத்தில் தேரோட்டம் நடத்தியுள்ளனர். அறங்காவலர் குழுவினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக இயக்கியுள்ளனர். இவ்வாறு அவர்கூறினார்.

ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், உதவி ஆணையர், துறை பொறியாளர்கள், தேர் வடிவமைத்த ஸ்தபதிகள், உபயதாரர்கள் முன்னிலையில்தான், தங்கத்தேர் சோதனை ஓட்டம் நடத்தினோம். கோவிலில் உள்ள மூன்றாவது பிரகாரத்தில் தேரோட் டம் நடத்துவதற்காக, தேரின் சக்கரம் உள்ளிட்ட பாகங்கள் சரியாக உள்ளனவா, தேரோட்டத்திற்கேற்ப மண் பாதை, கற்கள் பதிக்கப்பட்ட பாதைகள் இருக்கின்றனவா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்த பின், சோதனை ஓட்டம் நடத்தினோம். அப்போது சில இடர்பாடு ஏற்பட்டது. இதனால், தேரிலும், தேரோட்ட பாதைகளிலும், சில மாற்றங்கள் செய்ய வே ண்டியுள்ளது. இப்பணிகள் முடிந்ததும், கூடிய விரைவில், பக்தர்கள் முன்னிலையில் கோவில் பிரகாரத்திற்குள் தங்க தேரோட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar