Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவிலில் முதலமைச்சர் ... புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் தங்க சிம்ம வாகனத்தில் வீதியுலா புதுச்சேரி வரதராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் வைகாசி விழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் வைகாசி விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

24 மே
2026
07:05

 சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மே 15 ல் விநாயகர் சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளி காணிக்கை பெற்றார். பத்து நாட்கள் விநாயகருக்கு அங்கேயே அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை 10:30 மணிக்கு விநாயகர் மீண்டும் கோயில் திரும்பியதை அடுத்து திருவிழா தொடங்கியது. மதியம் 1:35 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். மதியம் 1:45 மணிக்கு பிடாரியம்மன் சன்னதி கொடிமரத்திலும், மதியம் 2:15 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனார் சன்னதி முன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் பாரம்பரிய முறைப்படி ஏடு படித்து ஐயனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டினர். 10 நாள் மண்டகபடியாக தினமும் பகல், இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. மே 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு பூரணை புட்கலை உடனான சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மே 29 ம் தேதி கழுவன் விரட்டு திருவிழா, ஜூன் 1ம் தேதி தேரோட்டம், ஜூன் 2ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar