பதிவு செய்த நாள்
26
ஆக
2026
12:08
தைப்பூசம் என்பது தமிழ் மாதம் தை திங்களில், பூச நட்சத்திரமும், பவுர்ணமியும் இணையும் நன்னாளில் முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா ஆகும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் உலகின் பல்வேறு முருகன் கோவில்களில், தைப்பூசம் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
வேல் வாங்கிய நாள்: அசுரன் சூரபதுமனை அழிக்க அன்னை பார்வதியிடம், முருகப்பெருமான் ஞானவேல் பெற்ற வெற்றியின் நாளாகவும் நடராஜ பெருமான் ஆனந்த நடனம் ஆடி சிவகாமசுந்தரிக்குக் காட்சி தந்த புனித நாளாகவும் போற்றப்படுகிறது.
தீமை அழிவு: தீமை மீது நன்மை பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டுப் பலன்கள்: முருகனை விரதமிருந்து வழிபடுவதால் கல்வி, செல்வம், ஞானம் மற்றும் மன இறைமை பெருகும் என்பது ஐதீகம்.
முக்கிய வழிபாட்டு முறைகள்:
விரதம்: பக்தர்கள் தைப்பூசத்திற்கு பல நாள் முன்பு கடுமையான விரதத்தை மேற்கொள்கின்றனர்.
காவடி மற்றும் பால் குடம்: நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி தூக்கி அழகு குட்டியும் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.
தைப்பூசத்துக்கான வரலாறு:
* தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில், தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. அதனால் பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.
* எங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு தலைமை தாங்கி செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒருவரை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.
* கருணை கடலான சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று, தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன் என்னும் முருகன் ஆவார்.
* சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள், ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர், ஆறுமுகங்களுடன் அவதரித்தார்.
* அன்னை பார்வதி தேவி, ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு, ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
* அம்பாள் அளித்த வேல்-ஐ ஆயுதமாகக் கொண்டே, , தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அசுரர்களை, முருகன் திருச்செந்தூரில் வதம் செய்து தேவர்களை பாதுகாத்தார்.
* அதனால் முருகரைப் போலவே அவரது வேலுக்கும் தனி சக்தியுண்டு. அசுரர்களை வதம் செய்ய உதவிய முருகப்பெருமானின் வேல்-ஐ பூஜிப்பதாலேயே தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
* தைப்பூசத்தில் முருகனுக்கு பல வித பூஜைகள் நிவேதனங்கள் என்ன செய்து ஆராதிப்பதுடன் கந்த சஷ்டி கவசம் சண்முக கவசம் திருப்புகழ் போன்ற பாடல்களை பாராயணம் செய்யலாம்.
தைப்பூச நாள் விரதம் எவ்வாறு கடைபிடிப்பது
* தைப்பூச நன்னாளானது முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும் குரு பகவானுக்கும் கூட, இந்த நாள் சிறப்புடையதாகும்.
* தைப்பூச நாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த கலிவெண்பா போன்றவற்றை மாலை வரை படிக்கலாம். வேலைக்கு செல்வோர், கந்தனை காலையிலேயே பூஜித்து மனதார வணங்கி விட்டு நாள் முழுவதும் கந்தனை நினைத்து, "ஓம் சரவணபவ" என்னும் மந்திரத்தை உச்சரித்தவாறே வேலைகளை செய்யலாம்.
* காலை மதியம் என இரு வேலையும், பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து, மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்தது. முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலை இன்று வழிபடுவது நல்லது. காலை மாலை என இரு வேலையும், இந்நாளில் கோவிலுக்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பு சேர்க்கும்.
* முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது, இந்த நன்னாளில்தான். அந்த ஞானவேல் கொண்டே ஞானப்பண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது.