Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் விநாயகர் கோவில்களில் மஹா சங்கடஹர சதுர்த்தி
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் விநாயகர் கோவில்களில் மஹா சங்கடஹர சதுர்த்தி

பதிவு செய்த நாள்

01 செப்
2026
10:09

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில், நேற்று மஹா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.


விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் தேய்பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. மஹா சங்கடஹர சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம், திருக்கச்சிநம்பி தெருவில் உள்ள, திருக்கச்சியம்பதி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகமும், அருகம்புல், மலர் மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் ராகு, கேது, சனி பகவான்களுக்கும் அபிஷேகம் நடந்தது. பின், நட்சத்திர விருட்ச விநாயகருக்கு, பல்வேறு நறுமண திரவியங்கள் மூலம் அபிஷேகமும், மலர் அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடந்தன. காஞ்சிபுரம் காந்தி சாலை, வன்னீஸ்வரர் கோவில் சித்தி செல்வ விநாயகர், வி.என்.பெருமாள் தெரு விக்னராஜ விநாயகர், வரதராஜபுரம் தெரு வரசித்தி விநாயகர், திருக்காலிமேடு ஆனந்த விநாயக ர். சவுராஷ்டிரா தெரு செல்வகணபதி, பாலாஜி நகர் சிந்தாமணி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவிலில் நேற்று மஹா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை :  ஆவணி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சுண்டக்காமுத்தூர் பைபாஸ் ரோடு புட்டு விக்கி அருகில் ... மேலும்
 
temple news
சென்னை: பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடை, தமிழகத்தில் 52 முக்கிய கோவில்களில், இன்று (செப்.,01) ... மேலும்
 
temple news
திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் வரும் செப். 6 முதல் 8 வரை மூன்று நாள், அகில பாரத சன்னியாசிகள் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பவித்ரோத்ஸவம் திருவிழாவின் ... மேலும்
 
temple news
கீழக்கரை: ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படும் விழா சங்கடகர சதுர்த்தி என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar