Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தி விழா; மயில் வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 நாகை கடலில் தங்க மீன் விடும் வைபவம்; அதிபத்த நாயனாருக்கு சிறப்பு ப;ஜை
எழுத்தின் அளவு:
 நாகை கடலில் தங்க மீன் விடும் வைபவம்; அதிபத்த நாயனாருக்கு சிறப்பு ப;ஜை

பதிவு செய்த நாள்

09 செப்
2026
11:09

நாகப்பட்டினம்: நாகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் நடுக்கடலில் எழுந்தருளி காட்சியளித்ததை நினைவு கூறும் வகையில், கடலில் தங்க மீன் விடும் வைபவம் நேற்று நடந்தது.


நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு நாளும் வலையில் சிக்கும் முதல் மீனை, சிவபெருமானை நினைத்து வணங்கி கடலில் விட்டு விடுவது அவரது வழக்கம். அவரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் சில நாட்கள் அதிபத்த நாயனாரின் வலையில் மீன்கள் சிக்காமல் செய்தார். பின்னர், நாள்தோறும் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் படி செய்துள்ளார். வறுமையில் வாடிய நிலையிலும் வலையில் சிக்கும் ஒரு மீனையும், இறைவனை நினைத்து கடலில் விட்டு விட்டு வெறுங்கையுடன் நாயனார் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அதிபத்த நாயனார் குடும்பத்தினர் உணவில்லாமல் வறுமையில் வாடிய நிலையில், ஒருநாள் அதிபத்த நாயனாரின் வலையில், நவரத்தினங்களால் ஆன தங்கமீன் சிக்கி உள்ளது. தங்க மீனாயினும் தயங்காமல், சிவனுக்கே உரியது என மகிழ்ச்சியோடு கடலில் விட்டுள்ளார்.


அதிபத்த நாயனாரின் தீவிர பக்தியை மெச்சிய சிவபெருமான், நடுக்கடலில் இடப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி அதிபத்த நாயனாருக்கு காட்சியளித்தார். அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வலையில், நேற்று நீலாயதாட்சியம்மன் கோவிலில், சிவபெருமான் தேவியருடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார். நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் மேளதாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் சிவபெருமானையும், அதிபத்த நாயனாரையும், புதிய கடற்கரைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். புதிய கடற்கரையில் ஆரிய நாட்டுத் தெரு கிராம மீனவர்கள், சீர் வரிசையுடன் வரவேற்றனர். அங்கு சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின் அதிபத்த நாயனார் படகில் சென்று கடலில் தங்க மீன் விடும் வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
 மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் ... மேலும்
 
temple news
போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar