Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம்: விநாயகர் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புறம்பயம் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய நடைபெற்ற தேன் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்புறம்பயம் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய நடைபெற்ற தேன் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 செப்
2026
12:09

தஞ்சாவூர்; திருப்புறம்பயம் ஸ்ரீசாட்சிநாத சுவாமி கோவிலில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய தேனபிஷேகம் நடந்தது.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அருகே திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கரும்படு சொல்லியம்மை உடனாகிய சாட்சிநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே தேனபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று (14ம்தேதி) விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மாலை தேன் அபிஷேகம் தொடங்கி விடிய விடிய நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு விநாயக பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து இரவு முழுவதும் இன்னிசை நிகழ்ச்சிகள், நாட்டிய அரங்கம், வாழ்த்தரங்கம், பட்டி மன்றம் உள்ளிட்டவை நடந்தது.  ஏற்பாடுகளை மதுரை ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் 293வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளின் ஆணைப்படி, காறுபாறு ஸ்ரீமத். சொக்கநாத தம்பிரான் மற்றும் தேனபிஷேக விழாக்குழுவினர் செய்திருந்தனர். இக்கோவிலில் நத்தைகூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகிய கடல் பொருட்களாலான மேனியைக் கொண்டவராகப் பிரளயம் காத்த விநாயகர் எழுந்தருளியுள்ளார். வருண பகவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி தினத்தில் மட்டுமே தேனபிஷேம் நடக்கிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் திருமேனியில் உறிஞ்சப்பட்டு விநாயகர் செம்பவள மேனியராக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவம் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் எட்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் செப்டம்பர் 15 முதல் 23 வரை நடைபெறவுள்ள ஸ்ரீவாரி வருடாந்திர ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் ரிஷி பஞ்சமி கொண்டாடப்படுகிறது.. சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar