எல்லாம் விதிப்படி அமையும் உறுதிபடச் சொல்கிறார் அவ்வையார்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2026 01:10
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது. * சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி சோறும், உடுக்க நான்கு முழமும் போதும். ஆனால் நாம் ஆசைப்படுவதோ கோடி விஷயம். * ‘சிவாய நம’ என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் வழி. * பிறருக்கு செய்த சிறுஉதவி கூட நிச்சயம் ஒருநாள் உனக்கு நன்மை தரும். * இளமையில் வறுமையும், முதுமையில் செல்வமும் பெற்றால் துன்பமே மிஞ்சும். * வெறும் பானையை அடுப்பில் வைத்தால் பொங்குமா... அதுபோல் நல்லது செய்யாமல் கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன். * எவ்வளவுதான் முயன்றாலும் தகுந்த காலம் கூடினால் மட்டுமே, உன் செயலுக்கு பலன் கிடைக்கும். * முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கு ஏற்பவே, இப்பிறவியில் செல்வம் சேரும். * நல்ல குணமுள்ள மனைவி அமைந்து விட்டால் உனக்கு வேறெதுவும் தேவையில்லை. * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், மகாலட்சுமியின் கடாட்சமும் கிடைக்கும். * நீ செய்த புண்ணியத்தின் படியே முயற்சியில் ஒருவனுக்கு வெற்றி கிடைக்கிறது. * பிறருக்கு கிடைக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லையே என வருந்தாதே. * உயிர் பிரியும் போது பணம் உன்னுடன் வராது. அதனால் பணத்தை வைத்து நல்லதை செய்.