திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள சூரியதீர்த்தம் குளம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கும் பணி நடக்கிறது. திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலுக்குள் அமைந்துள்ள புனித தீர்த்த குளமான சூரிய தீர்த்தம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து இருந்தது. இக் குளத்தை சீரமைக்க வேண்டும் என படத்துடன் சில மாதங்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. பக்தர்களும் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் சார்பில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகள் மூலம் குளத்தில் இருந்த குப்பைகள், மண்டிக்கிடந்த செடிகள் அகற்றபட்டு குளத்தின் கரைகள் பலப்படுத்தபட்டு வருகிறது. நீர் வரத்துக்கான வழிகள் சீரமைக்கபடுகின்றன.