பதிவு செய்த நாள்
16
அக்
2026
02:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி கோவிலில் நவராத்திரி விழாவின் ஆறாவது நாளான நேற்று, ஒருவருக்கொருவர் இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடந்தது.
காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில், நவராத்திரி விழா மற்றும் மஹாசண்டி ஹோமம், கடந்த 11ம் தேதி தொடங்கியது. இதில், தினமும் துர்க்கை அம்மனுக்கு ஹோமங்கள் நடந்து வருகின்றன.
இதில், ஆறாவது நாளான நேற்று, துன்பம், கவலை, பாவம், மனக்குழப்பம் ஆகியவை நீங்கி, ஒருவருக்கொருவர் இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக, துர்க்கை அம்மனுக்கு ஹோமம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.