Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை சுப்ரமணிய சுவாமிக்கு ... குற்றாலநாதர் கோவிலில் பச்சை சாத்தி அலங்காரம்: ஐப்பசி விசு திருவிழாவில் தாண்டவ தீபாராதனை குற்றாலநாதர் கோவிலில் பச்சை சாத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் கருட சேவை: மழையிலும் குறையாத கோவிந்தா கோஷம்.. மலையப்ப சுவாமியை தரிசித்து பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலையில் கருட சேவை: மழையிலும் குறையாத கோவிந்தா கோஷம்.. மலையப்ப சுவாமியை தரிசித்து பரவசம்

பதிவு செய்த நாள்

16 அக்
2026
08:10

திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை இரவு கருட வாகன சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.


திருமலையில் மலையப்ப சுவாமி, தனக்கு மிகவும் உகந்த கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்கக் காசுகளால் ஆன லட்சுமி காசு மாலை அணிந்து, அபய முத்திரையுடன் காட்சியளித்த பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய ஊர்வலம், திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் நடைபெற்றது. கோயில் யானைகளின் கம்பீர நடை, மங்கள இசை, பஜனைகள், கோலாட்டம், ஜீயர்களின் வேத முழக்கம் என விழா பக்திப் பரவசத்துடன் களைகட்டியது. வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, ‘கோவிந்தா’ நாமத்தை முழங்கினர்.


மழையையும் பொருட்படுத்தாத பக்தர்கள்: பிற்பகலில் தொடங்கிய மழைத் தூறலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளைத் தரிசித்தனர். பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னப்பிரசாதம், குடிநீர், பால், பாதாம் பால், சிற்றுண்டி மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மழையிலும் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து பக்தர்கள் திருப்தி தெரிவித்தனர்.


கருட சேவையின் மகத்துவம்!


வைணவ மரபில் கருட சேவை மிகுந்த ஆன்மிகச் சிறப்பைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. பெருமாளின் பரம பக்தரான கருடாழ்வார் மீது எழுந்தருளும் இறைவனைத் தரிசிப்பது, பக்தி மற்றும் முழுமையான சரணாகதியின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. புராண நம்பிக்கைகளின்படி, கருட வாகனத்தில் கம்பீரமாக எழுந்தருளும் பெருமாளைத் தரிசிப்பது பாவங்கள் நீங்கி, ஞானமும் வைராக்கியமும் பெறுவதற்கான வழியாகக் கருதப்படுகிறது. இந்தத் தரிசனம் தங்கள் வாழ்வைப் புனிதமாக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


இன்றைய கருட வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடு, செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அலுவலர் சி. வெங்கையா சௌத்ரி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணை செயல் அலுவலர்கள் டாக்டர் ஏ. சரத், பிரபால கோபிநாத், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரி முரளி கிருஷ்ணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். சுப்பராயுடு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மழையையும் மீறி பக்தர்கள் திரண்டதால், திருமலை முழுவதும் ‘கோவிந்தா’ நாமம் ஒலித்து பக்திப் பெருவிழாவாகக் காட்சியளித்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar