திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு: யானைக்கு பெயர் சூட்டினர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2026 04:10
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் கலெக்டர் வந்தனா கார்க், வடக்கு மண்டல ஐ.ஜி பிரவீன் குமார் அபிநபு, டி.ஐ.ஜி. மகேஷ் ஆய்வு: செய்தனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற நவம்பர் 15ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தீபத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரமான ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் அண்ணாமலையார் கோவிலில் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு செய்தனர். முன்னதாக அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வருகை தந்த அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்க வேண்டாம் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காதீர்கள் என்று உத்தரவு வழங்கினர். இதை எடுத்து காவல்துறையினர் வருவாய்த்துறையினர் கோவில் ஊழியர்கள் பத்திரிக்கையாளர்களை தடுத்து நிலையில் பத்திரிகையாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் பத்திரிகையாளர்கள் உள்ளே வரவேண்டாம் என மீண்டும் அவர் கூறியதால் மீண்டும் அமைச்சர்களுக்கு பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாத நிலவியது அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
நமச்சிவாயா: தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அசாமில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹிராலால் யானைக்கு, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷ் இணைந்து ‘நமச்சிவாயா’ எனப் பெயர் சூட்டினர். அதற்கு வழங்கக்கூடிய உணவுகள் குறித்து யானைப்பாகனிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து திருமஞ்சன கோபுர வாயிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு வழங்கும் இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் கலந்துரையாடியவர் அன்னதான கூடத்திற்கு சென்று பக்தர்களோடு பக்தர்களாக அமர்ந்து அன்னதானம் அருந்தி கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொள்ள சென்றார்.
போக்குவரத்து நெரிசல்: அண்ணாமலையார் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்களால் மாநகரம் முழுக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவித்தனர். குறிப்பாக மாடவீதிகளில் பல்வேறு இடங்களில் அமைச்சர்களை வரவேற்பதற்காகவும் அமைச்சருடன் வந்திருந்த கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்ததால் பக்தர்களும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள்.